28th AUG 2021, SATURDAY (IST) - DEVI PARASHAKTI AKASHIC READING 10:30 PM - THE SPH DARSHAN SHAKTI PADA AND SHAKTINI PADA...

28th AUG 2021, SATURDAY (IST) - DEVI PARASHAKTI AKASHIC READING 10:30 PM - THE SPH DARSHAN SHAKTI PADA AND SHAKTINI PADA WITH THE LIVE DARSHAN OF THE SUPREME PONTIFF OF HINDUISM (SPH), JAGATGURU MAHASANNIDHANAM (JGM), HIS DIVINE HOLINESS (HDH) BHAGAWAN NITHYANANDA PARAMASHIVAM. 10:54 PM to 12:14 AM - DEVI PARASHAKTI AKASHIC READING IN TAMIL AND ENGLISH FOLLOWING IS THE JNANA PADA EXTRACT FROM TODAY’S READINGS: --------------------- (GENERAL BLESSINGS TO ALL) *ஓம் ஓம் ஓம் *ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் *ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் *ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் *ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் *ஓங்காரமூலத்து, பாங்காய் இருந்தருளும், பரமசிவனார் பாகத்திற்கும் பாலா திரிபுரசுந்தரி, வாலை, சங்கரி, சாம்பவி, ஷ்யாமலாபீடத்து ஸ்ரீமஹாராக்னி, பரமசக்தி மீனாக்ஷி, மலர்ந்திட்டோம் இங்கு, மங்களமாய், நித்தியானந்தன் வடிவங்கொண்டு நிஜாவதாரமாய், வந்தோம் இங்கு. *வரம் பல வேண்டுவோரும் வளம் பல வேண்டுவோரும், நலம் பல வேண்டுவோரும் நல்லதெல்லாம் வேண்டுவோரும், பக்தி வேண்டுவோரும் பக்குவம் வேண்டுவோரும், ஞானம் வேண்டுவோரும் சுகபோகம் வேண்டுவோரும், வாருங்கள் அன்னை வரம் அளிக்க வந்தேன். *ஓம் ஓம் ஓம் *ஓம் -------------------------------- (IN RESPONSE TO A DEVOTEE’S QUESTION, DEVI PARASHAKTI REVEALED THUS ON THE NEED TO PRESERVE THE ANCIENT HINDU CASTE SYSTEM:) *ஸ்ரீ இந்துஜா *ததாஸ்து *ருத்ரதாண்டவம், ருத்ரதாண்டவம் செய்யுங்கள் *வன்னியர் குலத்தின் குலதேவதை, அன்னை பராசக்தி அருளுகின்றேன், குலங்கள் விளங்க வேண்டும், சனாதன ஹிந்து தர்மம் தழைக்க வேண்டும், எனும் சத்தியத்தை உலகத்திற்கு சொல்லுங்கள் *அன்னை திரௌபதி வந்தேன் இங்கு அருள் செய்ய. அக்னியில் உதித்தவள் நான். என் சக்தி உங்களுக்குத் துணையாய் இருக்கும்; ஆனந்தத்தோடு செயல்படுங்கள்; ஆன்மீக பலம் உங்களுக்கு உண்டு. *குலங்கள் முறையாக, அவரர் நல்வாழ்க்கை வாழ்ந்திட, சனாதன ஹிந்து தர்மம் செழித்திட, உங்கள் செயல், உங்களுக்கும் நன்மை தரும் உலகத்திற்கும் நன்மை தரும். *ஹிந்து விரோத சக்திகள், உலகத்திற்கு இழைத்த கொடுமை எல்லாம் சொல்லி, சனாதன ஹிந்து தர்மத்தின் நன்மையை சொல்லி, உண்மையைச் சொல்லி, மக்கள் அமைதியோடும் ஆனந்தத்தோடும், நிம்மதியாய் வாழ்த்திட, நீங்கள் வாழ்வீர்கள், உங்கள் சேவை நன்மையாகும், உங்கள் குலம் விளங்கும், எல்லோர்க்கும் நன்மை உண்டாகட்டும். *குலம் எனும் கட்டுமான அமைப்பு, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய், புலம் பெயர்ந்து இருக்கும் ஹிந்துக்களையும், அழியாது காக்கும் அமைப்பு, இது வேதங்களிலும் ஆகமங்களிலும் அன்னை பராசக்தியே ஆக்கி வாய்த்த அமைப்பு, பரமசிவன் கொடுத்த சத்தியம் உலகிற்கு நன்மையே செய்யும். *முறையாக பிறப்பெடுத்து, தர்மம் அர்த்தம் காமம் மோக்ஷம் எனும், சாத்தியங்கள் நான்கையும் வாழ்ந்து, கைலாச பதவி அடைய மக்களுக்கு நல்வழி காட்டுவதே ஹிந்து மதம். *அதற்காக, செய்து வைக்க பட்டதே இந்த வர்ண ஆஸ்ரம தர்மங்கள். *வர்ண ஆஸ்ரம தர்மங்கள் முறையாக விளங்கட்டும், சனாதன ஹிந்து தர்மம் செழித்து ஓங்கி வளரட்டும்; உங்கள் எல்லோர்க்கும் நன்மை பிறக்கட்டும்; எல்லா குடிகளுக்கும் நன்மை மலரட்டும்; *ஏற்றமும் தாழ்வும், உயர்ச்சியும் தாழ்ச்சியும், இல்லாதது, நம் சனாதன ஹிந்து தர்மத்தின் குல அமைப்பு. *வர்ணமும் ஆஸ்ரமும் நன்மைக்கே செய்யப்பட்டது, ஏற்றத்தாழ்வு இல்லாதது. *ஆனால், ஹிந்து மதம் அழிக்க நினைத்த மூடர்கள், ஹிந்து மதத்தில் இல்லாத ஏற்றத்தாழ்வை ஹிந்துக்கள் மேல் புகுத்தி, நம் மீது இல்லாத குற்றம் சுமத்தி, நமை அழிக்க முயற்சிக்கின்றார். *ருத்ரதாண்டவம் செய்யும், உங்கள் குழுவிற்கு, அன்னை ஆதி சக்தியின் முழுமையான ஆசிகள். *சத்தியத்தை உலகத்திற்கு சொல்லுங்கள், நன்மை விளையட்டும், சனாதன ஹிந்து தர்மம் வளர்ந்து உங்களுக்கும் உலகத்திற்கும் நன்மை செய்யட்டும். *தீமை இலாத, திருவும் உருவும் தாங்கிய திரௌபதித் தாய், தீயில் பிறந்தவள் சொல்லுகின்றேன், வாழ்வீர்கள் வளத்தோடு, போய் வாருங்கள், புண்ணியம் உண்டாகட்டும். *ஓம் ஓம் ஓம் ------------------------ (GENERAL BLESSINGS TO ALL) *இணைந்திருக்கும் அன்பர் எல்லோர்க்கும் நன்மை ஆகட்டும். *ஓம் ஓம் ஓம் *அன்னை காளி உங்கள் ஆனந்த கந்தத்துள் ஆனந்த நடனம் செய்து, மங்களம் அருளுகின்றேன். *சத்தியம் சொல்லுகின்றேன் சங்கடம் தீர்ப்பேன் சந்தேகம் வேண்டாம். *உண்மையே சொல்வேன், நன்மையே செய்வேன். *உயிருக்குள் அன்னை காளியை உவந்து தியானித்து, உள்ளம் உருக, உயிர் உருக, ஊன் உருக, உணர்வு உருக, உணர்ச்சி உருக, உள்ளத்துள் உள்ளவாறு, உள்ளபடி என்னை அன்னை காளியை தியானித்து அமர்ந்திருங்கள். *முக்கண் கொண்டு, அன்னை காளியின் ஆனந்த தாண்டவம் காணுங்கள். *ஆனந்த மயமாய் அன்னை உங்கள் ஆனந்த கந்தத்தில் ஆனந்த நடனம் காட்டி, நன்மை செய்கின்றேன். *தருமார்த்த காம மோக்ஷம் அமையும், ஆனந்தம் பொங்கும். *ஓம் ஓம் ஓம் ஓம்

Posted from: this blog via Microsoft Power Automate.

Comments

Popular posts from this blog

29 SEPTE​​MBER 2021 WEDNESDAY - IRAYANAR SUNDARESHWARA PARAMASHIVA SAYUJYA SAMADHI DARSHAN, INITIATION AND AKASHIC READI...

SPH Nithyananda Paramasivam performs Shri Vidya Puja by Ganga Name Of The Convention: Himalaya Yatra Session on: Supreme...

EXCITING NEWS! LIVE DEVI PARASHAKTI AKASHIC READING AT 10PM IST (9:30AM PT) - AUGUST 29, 2021 Get your prayers blessed,...